இன்று 31/08/2021 (ஆவணி 15) ஆவணி ரோகினி, ஸ்ரீ கிருஷ்ணர் திருநக்ஷத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ பண்டார ஆஸ்தான மண்டபத்தில் புறப்பாடு கண்டருளினார்.
கொண்டல்வண்ணனைக் கோவலனாய்வெண்ணெ யுண்டவாயன் * என்னுள்ளம்கவர்ந்தானை அண்டர்கோன்அணியரங்கன் என்னமுதினைக் கண்டகண்கள் *மற்றொன்றினைக் காணாவே.
- அமலனாதிபிரான், திருப்பாண் ஆழ்வார்
பச்சைமாமலைபோல்மேனி பவளவாய்கமலச்செங்கண் அச்சுதா! அமரரேறே! ஆயர்தம்கொழுந்தே! என்னும் * இச்சுவைதவிரயான்போய் இந்திரலோகமாளும் * அச்சுவைபெறினும்வேண்டேன் அரங்கமாநகருளானே!
- திருமாலை, தொண்டரடிப்பொடி ஆழ்வார்
Comments