top of page

Srivilliputhur ஆண்டாள் நாச்சியார் ஆலயத்தில் ஆடிப்பூர உற்சவம் தொடக்கம்

Updated: Sep 18, 2021

ஶ்ரீ வில்லிபுத்தூர் ஶ்ரீஆண்டாள் நாச்சியார் ரெங்கமன்னார் ஆலயத்தில் திருஆடிப்பூர உற்சவம் தொடங்கியது. கொரோனா விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் நிகழ்ச்சி நடந்தது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி, தேங்காய் தொட்டு நியமனம் பெறுதல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை மிருத்ஸங்கிரகணமும், மறுநாள் காலை சேனை முதல்வர் புறப்பாடும் நடைபெற்றது.

Srivilliputhur Andal Urchavam 2021

01/08/21 - தேங்காய் தொட்டு நியமனம் பெறுதல் மாலை மிருத்ஸங்கிரகணம்

02/08/21 - சேனை முதல்வர் புறப்பாடு

முதலாம் திருநாள்:

03/08/21

காலை:

துவஜாரோஹண கொடியேற்றத்துடன் ஆண்டாள் தாயார் ரெங்கமன்னார் உற்சவம் ஆரம்பம் ஆகிறது

இரவு:

திருவீதி புறப்பாடு

ஆண்டாள் தாயார் ரெங்கமன்னார் சேர்த்தியாக வண்டி சப்பரத்தில் திருவீதி எழுந்தருளல்

இரண்டாம் திருநாள்:

04/08/21

காலை:

ஆண்டாள் தாயார் தங்கப் பல்லக்கிலும் ரெங்கமன்னார் தந்தப் பல்லக்கிலும் மண்டபங்களுக்கு எழுந்தருளல்

இரவு:

ஆண்டாள் தாயார் சந்திர பிரபையிலும் ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் திருவீதி எழுந்தருளல்

மூன்றாம் திருநாள்:

05/08/21

காலை:

ஆண்டாள் தாயார் தங்கப் பல்லக்கிலும் ரெங்கமன்னார் தந்தப் பல்லக்கிலும் மண்டபங்களுக்கு எழுந்தருளல்

இரவு:

ஆண்டாள் தாயார் தங்கப் பரங்கி நாற்காலியிலும் ரெங்கமன்னார் அனுமந்த வாகனத்திலும் திருவீதி எழுந்தருளல்

நான்காம் திருநாள்:

06/08/21

காலை:

ஆண்டாள் தாயார் தங்கப் பல்லக்கிலும் ரெங்கமன்னார் தந்தப் பல்லக்கிலும் மண்டபங்களுக்கு எழுந்தருளல்

இரவு:

ஆண்டாள் தாயார் சேஷ வாகனத்திலும் ரெங்கமன்னார் கோவர்த்தன கிரிதாரியாக திருவீதி எழுந்தருளல்

ஐந்தாம் திருநாள்:

07/08/21

காலை:

பெரியாழ்வார், ஐந்து திவ்யதேச பெருமாளுடன் சேர்த்து ஆண்டாள் ரெங்க மன்னார் திவ்ய தம்பதியினருக்கு மங்களாசாசனம் செய்தல்

இரவு:

ஐந்து கருட சேவை

ஆறாம் திருநாள்:

08/08/21

காலை:

ஆண்டாள் தாயார் தங்கப் பல்லக்கிலும் ரெங்கமன்னார் தந்தப் பல்லக்கிலும் மண்டபங்களுக்கு எழுந்தருளல்

இரவு:

ஆண்டாள் தாயார் கனக தண்டியிலும் ரெங்கமன்னார் யானை வாகனத்திலும் திருவீதி எழுந்தருளல்

ஏழாம் திருநாள்:

09/08/21

காலை:

ஆண்டாள் தாயார் தங்கப் பல்லக்கிலும் ரெங்கமன்னார் தந்தப் பல்லக்கிலும் மண்டபங்களுக்கு எழுந்தருளல்

இரவு:

ஆண்டாள் ரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியான் பல்லக்கில் சேர்த்தியாகத் திருவீதி வலம் வருதல்

எட்டாம் திருநாள்:

10/08/21

காலை:

ஆண்டாள் தாயார் தங்கப் பல்லக்கிலும் ரெங்கமன்னார் தந்தப் பல்லக்கிலும் மண்டபங்களுக்கு எழுந்தருளல்

இரவு:

ஆண்டாள் தாயார் புஷ்பப் பல்லக்கிலும் ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் திருவீதி வலம் வருதல்

ஒன்பதாம் திருநாள்:

திருவாடிப்பூர தேர்

11/08/21

அதிகாலை: 2 மணிக்கு ஏகாந்தத் திருமஞ்சனம்

காலை 4 மணிக்கு தனித்தனி தோளுக்கினியானில் எழுந்தருளி திருத்தேர் எழுந்தருளல்

பிறகு திருவாடிப்பூர தேரோட்டம் தொடக்கம்

இன்று மூலவருக்கு புஷ்பாங்கி சிறப்பு சேவை

பத்தாம் திருநாள்:

12/08/21

மாலை 5 மணிக்கு இரட்டை தோளுக்கினியான் பல்லக்கில் ஆண்டாள் தாயார் புறப்பாடு

இரவு – ஸப்தாவரணம்

வேத பிரான் பட்டர் புராணம் வாசித்தல்

பதினொன்றாம் திருநாள்:

13/08/21

காலை:

இரட்டை தோளுக்கினியான் பல்லக்கில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளல்

மாலை:

மூலஸ்தானம் எழுந்தருளல்

பன்னிரண்டாம் திருநாள்:

14/08/21

காலை உற்சவ சாந்தி

43 views0 comments

Comments

bottom of page