top of page

தினமும் கட்டாயம் செய்ய வேண்டிய பஞ்சமஹாயஜ்ஞம்!


தேவயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், பூதயஜ்ஞம், மனுஷயஜ்ஞம், பிரம்மயஜ்ஞம் என்பவை பஞ்சமஹாயஜ்ஞங்களாகும்.


ree

1.தேவயஜ்ஞம் என்பது பகவத்தாரதனமாகும்

2. பித்ருயஜ்ஞம் என்பது ப்ராதகாலத்திலும், மத்யாஹ்நகாலத்திலும், தீர்த்தமாடியவுடன் தேவர்ஷி பித்ருதர்பணம் பண்ணவேணும் என்று எம்பெருமானுடைய நித்யகிரந்தத்திலும், ஸதநுஷ்டதர்பணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.

3.பூதயஜ்ஞம் என்பது பிராணிகளுக்கு அன்னமிடுதல்.நாம் சாப்பிட்ட பிறகு இலையில் ஒரு பாகத்தை மீதி வைத்து அத்துடன் தூக்கி பிராணிகளுக்கு தூக்கிபோடவேண்டும்.சாப்பிடுவதற்கு முன் காக்கைக்கு அன்னமிடுதல் கூடாது.

4.மனுஷயஜ்ஞம் என்பது ஸ்ரீவைஷ்ணவர்களான அதிதிகளுக்கு அன்னமிடுதல். பெருமாள் திருவாராதனம் பண்ணின பிறகு யாரேனும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் நம்கிரகத்திற்கு வருகிறார்களா என்று ஒரு பசுமாடு கறக்கும் காலம் வரை( சுமார் 20 நிமிடம்) காத்திருக்க வேண்டும் .வந்தால் அவர்களை போஜனம் பண்ணி வைத்த பிறகு நாம் புசிக்கவேண்டும். ஸ்ரீ வைஷ்ணவர்கள் அல்லாதார் வந்தால் நாம் உண்ட பிறகு தான் அவர்களுக்கு இட வேண்டும் அவர்கள் உண்ட மிச்சத்தை நாம் இரவு உணவுக்கு அதைப் வைத்து கொள்ள கூடாது ஸ்ரீவைஷ்ணவர்கள் யாரும் வரவில்லை என்றால் நாம் வியாக்கியானங்களை சேவித்து அந்த போதை கழிக்கலாம் பிறகு நாம் உண்ணலாம்.இப்படி காத்திருப்பதையே மனுஷயஜ்ஞம் செய்தவர்கள் ஆகிவிடுவோம்

5. பிரம்மயஜ்ஞம் என்பது தினமும் வேதத்தில் ஒரு பகுதியை சொல்லுதல் வேத அத்தியயனம் செய்யவில்லை என்றால் புருஷ சுக்தம் ஆவது சொல்லவேண்டும் வேண்டும் அதை அத்தியயனம் பண்ண வில்லை என்றாள் திருவாய்மொழியில் ஒரு பத்தை சேவிக்க வேண்டும்.

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.
bottom of page