உயர்ந்த அந்தணன் ஒருவனுடைய மகனுக்கு, பௌத்த மதத்தவர்கள் உடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் தலையை மொட்டை அடித்துக் கொண்டு, பூணூலையும் அறுத்து திரிந்தான்.
உயர்ந்த அந்தணன் ஒருவனுடைய மகனுக்கு, பௌத்த மதத்தவர்கள் உடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் தலையை மொட்டை அடித்துக் கொண்டு, பூணூலையும் அறுத்து திரிந்தான்.
ஒருநாள், கூரத்தாழ்வான் அவனைப் பார்க்க நேரிட்டது. அவருடைய திருக்கண் பார்வையின் மகிமையினால், அவன் மீண்டும் பூணூல் அணிந்து, குடுமியும் வைத்துக் கொண்டு, பளபளவென்று திருமண் காப்பு (பெருமாளின் பக்தர்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளும் நாமம்) அணிந்து வந்தான்.
இதைக் கண்ட அவனுடைய தந்தை, “ஏன் இந்த மாற்றம்? ஒருவேளை கூரத்தாழ்வானைப் பார்த்தாயோ?” என்று கேட்டார். அருகில் இருந்தவர், “கூரத்தாழ்வானை பார்த்ததால் தான் மனம் மாற்றம் அடைந்தான் என்பது உமக்கு எப்படி தெரியும்” என்று கேட்டார். அதற்கு அவர், “வழிதவறிச் சென்றவர்களும், ஆழ்வான் திருக்கண்பட்டால், திருந்தி விடுவார்கள்”, என்று பதில் அளித்தார்.
என்னே ஆழ்வானின் பெருமை..!
படத்தை உற்று நோக்குங்கள். ஸ்வாமியின் திருக்கண் கடாக்ஷத்தை நாமும் பெறலாம். அவரது திருமேனியை நமது அல்ப கண்கள் மூலம் நன்கு க்ரஹித்து மனதில் தியானித்து கொண்டு பொழுதை களிக்கலாம்
Comentarios